ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
வடக்கு மருத்துவத்துறையின் ஊழல் மோசடி
அத்துடன், நேற்றையதினம்(13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு கொழும்பு நோக்கி விஜயம் மேற்கொண்ட போது வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாக ஊடறுப்பு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan