இலங்கையை உலுக்கும் படுகொலைகள் - சினிமாவை மிஞ்சும் பழிவாங்கும் நடவடிக்கை
இலங்கையில் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் மோதல் நிலைமை தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் படுகொலையின் பின்னணியில் பழிவாங்கல் நடவடிக்கையே பிரதான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகக் குழுவின் பிரதான தலைவர்களில் ஒருவராக மாகந்துரே மதூஷ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
பழிவாங்கல் நடவடிக்கை
இதற்கு பழிவாங்கும் வகையில் மதூஷிற்கு எதிரானவர்களை கொலை செய்யும் வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டிலிருந்து செயற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஒரு சம்பவம் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாகந்துரே மதூஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக, மதூஷின் புகைப்படத்துடன் வாசகமொன்றுடன் கூடிய சிறிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய பதாகை
(“අපේ අයියේ… එක එක්කෙනා එවනවා. අපි එනකන් බලාගන්න…”) “எங்கள் அண்ணனே ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்” என, குறித்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அத்துருகிரியவில் வைத்து பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் இறுதிக் கிரியைககள் இன்று பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.
இந்நிலையில் கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக, மதூஷின் புகைப்படத்துடன் வாசகமொன்றுடன் கூடிய சிறிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.