இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி
காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்டுள்ள குறித்த தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதல்
இதன்போது ஹமாஸ் தரப்பின் இராணுவ பிரிவின் தலைவரான மொஹமட் டெயிப் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மற்றுமொரு ஹமாஸ் தரப்பின் உயர் அதிகாரி ஒருவரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
எனினும் குறித்த இருவரும் உயிருடன் உள்ளனரா என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
