ரஷ்ய இராணுவ படையின் தலைமையகம் அழிப்பு - உக்ரைன் அதிரடி நடவடிக்கை
உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள வாக்னர் குழு (அல்லது வாக்னர் பிஎம்சி) எனப்படும் ரஷ்யாவின் நிழல் வாக்னர் துணை இராணுவக் குழுவின் தலைமையகத்தை உக்ரைன் அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் உக்ரைனிய ஆளுநராக இருக்கும் செர்ஹி ஹேடே (Serhiy Hayday) இதனை குறிப்பிட்டுள்ளார், போபாஸ்னாவில் நடந்த தாக்குதலைப் பற்றி அவர் கூறியுள்ளார்.
உக்ரேனியப் படைகள் கடுமையான ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் மற்றும் டொனெட்ஸ்க் கிழக்குப் பகுதியில் உள்ள பல நகரங்களில் முன்னேற பல முயற்சிகளை மேற்கொண்டன.
பல தாக்குதல்களை படைகள் முறியடித்ததாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களும், தெற்குப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட நகரங்கள் குறிப்பாக கெர்சன் பகுதி மீது ரஷ்ய ஷெல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தனர்.
Ka-52 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது
இதேவேளை, உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்யாவின் Ka-52 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 173 நாட்களை தொட்டு இருக்கும் நிலையில், இருநாட்டு இடையிலான தாக்குதல் நிதானமடைந்துள்ளது.
மேலும் இருநாட்டு அதிகாரிகளும் போர் நிறுத்தம் குறித்த கருத்துகளை தெரிவித்து வந்தாலும், அது தொடர்பான நடவடிக்கைகளில் இருநாடுகளும் அதிகாரப்பூர்வ செயல்முறைகளில் தங்களை ஈடுபடுத்தவில்லை.
இந்தநிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்யாவின் Ka-52 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் Ka-52 ரக ஹெலிகாப்டரின் இழப்பை முதலில் மறுத்த ரஷ்யா, ஹெலிகாப்டர் பாதுகாப்பாக விமான தளத்திற்கு வந்தடைந்ததாக தெரிவித்தது.