தீவிரமடையும் போர் : ரஷ்யா உக்ரைன் மீது நவீன ஏவுகணை தாக்குதல்
ரஷ்யாவின்(Russia) ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா, பெல்கோரட் மற்றும் கிரான்ஸ்னடர் ஆகிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இராணுவம் நவீன ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் அனுப்பியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ரஷ்யாவின் வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் இராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் தீவிரம்
இந்நிலையில் 9 ஏவுகணைகள், 61 ஆளில்லா விமானங்களை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் வானில் இடைமறித்து தகர்த்தெறிந்தன.

உக்ரைன் மீதான ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளின் இராணுவமும் தாக்குதலை அதிகரித்து வருவதால் போர் தீவிரம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri