ரஸ்ய உல்லாச படகை கைப்பற்றிய ஜெர்மன்!(காணொளி)
600 மில்லியன் டொலர் பெறுமதியைக் கொண்ட, சொகுசு உல்லாச படகு ஒன்று, ரஸ்ய நாட்டின் கோடீஸ்வரர் பில்லியனர் அலிஸிர் உஸ்மானோவிடமிருந்து ஜெர்மன் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் தகவல்படி, தில்பார் என்று பெயரிடப்பட்ட 512 அடி (156 மீ) கொண்ட இந்த கப்பல் ஹம்பர்க்கில் கைப்பற்றப்பட்டது.
உலோகத் தொழிலதிபர் உஸ்மானோவ், ஐரோப்பிய ஒன்றியத்தால் ரஸ்யர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளுக்குள் வரும் முக்கிய 25 தொழிலதிபர்களில் ஒருவராவார்.
இதேவேளை ரஸ்யாவிற்குச் சொந்தமான ஏனைய உல்லாசப் படகுகள்;, அமெரிக்காவுடன் ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லாத இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலைத்தீவுக்கு செல்வதை காண முடிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam