சிறைக்கைதிகளை இரகசியமாக போரில் களமிறக்கும் ரஷ்யா!அச்சத்தில் மேற்கத்திய நாடுகள்
இம்மாத இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில்,கிழக்கில் பாக்முட், வுஹ்லேடர் மற்றும் லைமன் ஆகிய இடங்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக பாக்முட் பகுதியில் இரண்டு முக்கிய சாலைகளை ரஷ்ய படையினர் தீயிட்டு கொளுத்தி போக்குவரத்தினை துண்டித்துள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவு மூலம் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
உக்ரைன் உளவுத்துறை தகவல்
இதன் காரணமாக குறித்த பகுதிக்கு கூடுதல் ஆயுதங்களுடன், வீரர்கள் சென்றுள்ளமையினால் மேற்கத்திய நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தண்டனை பெற்ற பெண் கைதிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போரில் ஏற்பட்டுள்ள பேரிழப்பைத் தொடர்ந்து ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
போர் நடவடிக்கைகளுக்காக நிஷ்னி என்ற நகரத்தில் 50 பெண் கைதிகளை களமிறக்கியுள்ளதாகவும்,இராணுவத்தில் போதிய அனுபவம் இல்லாதவர்களையும் போரில் ஈடுபடுத்தி வருவதாகவும், உக்ரைன் உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.