உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்! உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்ட ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 314 ஆவது நாளை எட்டியுள்ளதுடன் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா நகரில் தற்காலிக இராணுவ தளத்தில் 600 வீரர்கள் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
ரஷ்யா ஒப்புதல்
இராணுவ தளத்தின் மீது 6 ஹிமர்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் படைகள் வீசியதாகவும், அதில் 2 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், எஞ்சிய 4 ஏவுகணைகள் தாக்கியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக இராணுவ தளத்தில் உக்ரைன் இராணுவ தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.