வலுவடைந்துள்ள கத்லீன் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரித்தானியா
பிரித்தனியாவில்(UK) ஏற்பட்ட கத்லீன் புயலுக்குப்(Storm Kathleen) பிறகு அந்நாட்டின் மேற்கு சசெக்ஸில் பிராந்தியம் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் புயலின் தாக்கமானது தற்போதுவரை சீரான நிலைக்கு வராததால் அந்நாட்டு மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ள எச்சரிக்கை
பிரித்தானிய முழுவதும் நூற்றுக்கணக்கான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் மெட்மெரி ஹாலிடே பூங்காவில் இருந்து கிட்டத்தட்ட 200 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு இங்கிலாந்தின் லிட்டில்ஹாம்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் பலர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில இடங்களில் , 65 மைல் வேகத்தில் காற்று வீசும் என வானிலை அலுவலகத்தால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போர்ன்மவுத்தில் காணப்பட்ட கடற்கரை குடிசைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்படி கத்லீன் புயலுக்குப் பிறகு அடுத்த சில நாட்களில் தெற்கு இங்கிலாந்து, மேற்கு வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்து வீசும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
