பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் : அடையாளம் காணப்பட்ட 17 வயது குற்றவாளி
பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவனின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது.
குறித்த கத்திக்குத்து சம்பவத்தில், சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் கலந்து கொண்ட 6 வயது Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய 17 வயது சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவர்கள் சீர்திருத்த மையம்
ஆக்சல் முகன்வா ருடகுபனா (Axel Muganwa Rudakubana) என்ற அந்த 17 வயது சிறுவன் மீது 3 கொலை குற்றச்சாட்டுகளுடன் 10 கொலை முயற்சி தாக்குதல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் Lancashire கிராமத்தை சேர்ந்த சந்தேக நபரான 17 வயது சிறுவன் , Liverpool Crown நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குற்றவாளியான சிறுவன் தற்போது சிறுவர்கள் சீர்திருத்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆக்சல் முகன்வா ருடகுபனா Liverpool Crown நீதிமன்றத்தில் ஒக்டோபர் 25ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |