வலுப்பெற்ற இலங்கை ரூபாவின் மதிப்பு! வாகன இறக்குமதியில் பதிவான திடீர் மாற்றம்
தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை வருமானம் ஆகியவற்றின் வளர்ச்சியால் நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி 2026 ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீத பாரிய வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 378 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு ஜனவரி இறுதியில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதில் சீனாவுடனான பரஸ்பர பறிமாற்றல் வசதியும் அடங்கும். இறக்குமதியை விட ஏற்றுமதியின் வளர்ச்சி அதிகமாக இருந்ததால், வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
எனினும், ஏற்றுமதி விலைகளை விட இறக்குமதி விலைகள் வேகமாக உயர்ந்ததால் 'வர்த்தக விதிமுறைகள்' சற்றே சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . 2026 ஜனவரியில் வாகன இறக்குமதிக்காக 224 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
இது டிசம்பர் மாதத்துடன் (301 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் குறைவானதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 0.2 சதவீதத்தால் வலுவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan