அரசியல் களத்தில் இனவாதத்தை தூண்டும் ட்ரம்ப்: வெளியான கமலா ஹாரிஸின் புகைப்படம்
அமெரிக்க (America) துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து தொடர்ந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், அவர் தற்போது கமலா ஹாரிஸின் (Kamala Harris) இந்திய வம்சாவளி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்ற நிலையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய வம்சாவளி
கமலா ஹாரிஸ் பிறப்பிலேயே கறுப்பினத்தவர் அல்ல அவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் கமலா ஹாரிஸ் வெளிப்படை தன்மை அற்றவர் எனவும் சர்ச்சையை ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், "கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். கமலா ஹாரிஸ் தற்போது கறுப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இவற்றிற்கிடையில், இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் ட்ரம்ப்பின் கருத்துக்களுக்கு பலரும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
