பிரித்தானிய பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் யூரோப்பிய ஒன்றிய நுழைவு–வெளியேற்ற (EES) முறைமை காரணமாக பிரித்தானிய பயணிகள் சில பிரான்ஸ் அரசாங்க விதிகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடருந்து மூலம் பிரான்ஸுக்குச் செல்லும் பிரித்தானியர்கள், இனி, தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.
முக்கிய தகவல்
அந்த இயந்திரம், பயணிகளிடம் போதுமான பணம் உள்ளதா, திரும்ப வருவற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டீர்களா, பிரான்சில் ஹொட்டல் முன்பதிவு செய்துவிட்டீர்களா, மருத்துவக் காப்பீடு உள்ளதா என்னும் போன்ற கேள்விகளைக் கேட்கும்.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளில் விதிகளுக்கு உட்படும் வகையிலான பதிலளிக்கவில்லையென்றால், உதாரணமாக, திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி இயந்திரத்தில் அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்தும், அதற்குப் பின்னரும் ஒரு அதிகாரி கடவுச்சீட்டை பார்வையிட முடியும்.
பிரான்சுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், இனி தொடருந்து நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடும்.
படகில் செல்லும்போதும், விமான நிலையங்களிலும் இந்ம வழிமுறை பின்பற்றபடுமா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
