பிரித்தானியா செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியா, விசா தொடர்பில் மீண்டும் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது.
அதாவது, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நடைமுறைக்கு வந்த புதிய விதியின்படி, இனி பிரித்தானிய கடவுச்சீட்களில் vignettes எனப்படும் முத்திரை, இடப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் கடவுச்சீட்களில் vignettes எனப்படும் முத்திரையிடப்படும் வழக்கம் இருந்துவந்தது.
வெளியான அறிவிப்பு
அந்தவகையில், இந்த முத்திரை இனி அவர்களுடைய கடவுச்சீட்களில் முத்திரையிடப்படாது.

அதற்கு பதிலாக, அவர்களுடைய புலம்பெயர்தல் நிலை (immigration status), இனி டிஜிட்டல் முறையில், e-visaவாக பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல்மயமாக மாற்றுவதின் மற்றொரு படியாக இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.