ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் சதி: அறிக்கைகளில் அம்பலம்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கான மக்கள் அங்கீகாரம் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தால், அவரது பதவிக்கான போட்டியில் 13 பேர் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுமானால், அதற்குப் பின் ரிஷி சுனக் பிரதமராக இருக்கமாட்டார் என நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
திரைமறைவில் வேலை
இதற்கிடையில், ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் வேலை நடப்பதாகவும், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர், அவரது கட்சியினரே, உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், ரிஷி சுனக்கிற்கு பதிலாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் முதல் நபர், கெமி பேடனாக் என தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு அடுத்தபடியாக கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகள் கொண்டவரான உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உள்ளார் என கூறப்படுகிறது.

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
