முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்
தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (30) பிரித்தானியா தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு
இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லது இரத்து செய்யப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில் இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக NATS தெரிவித்துள்ளது.
ஆறு முக்கிய விமான நிலையங்கள்
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்துள்ளது.
தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri