பொலிஸ் திணைக்களம் தொடர்பில் உதய கம்மன்பில குற்றச்சாட்டு
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் விடுத்த கோரிக்கையை ஏற்று பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ரகசியத் தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லலித் பத்திநாயக்க நீக்கப்பட்டாலும், அவரது செயல் ஊழலை வெளிப்படுத்தும் கடமையே என்று கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் குறித்த தகவலைத் தெரிவிப்பது
பொலிஸ் கொள்வனவில் நடந்த ஊழல் குறித்த தகவலை ஊடகவியலாளர் ஒருவருக்குத் தெளிவுபடுத்திய பத்திநாயக்க, இது குறித்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறையிடுமாறு மட்டுமே கோரியுள்ளார்.

ஊழல் குறித்த தகவலைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாக மாறினால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்று கம்மன்பில கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், லலித் பத்திரநாயக்கவின் நீக்கம் இன்னும் பொலிஸ் ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam