சுதந்திரக் கட்சியில் இருந்து தயாசிறி நீக்கப்பட்ட காரணத்தை போட்டுடைத்த உதய கம்மன்பில

Sri Lanka Politician Sri Lankan political crisis Dayasiri Jayasekara Udaya Gammanpila
By Rakesh Sep 11, 2023 02:14 AM GMT
Report

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைக்கும் முயற்சிக்குத் தயாசிறி ஜயசேகர தடையாக இருந்த காரணத்தால் தான் அவரைக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் நேற்று (10.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்கமாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

தயாசிறிக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி: வெளியான தகவல்

தயாசிறிக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி: வெளியான தகவல்

அரசமைப்புக்கு முரண்

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள் இரவு மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்சகளுடன் ஒன்றிணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதாக மைத்திரிபால அறிவித்தார்.

உதய கம்மன்பில

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்குக் கூட மைத்திரிபாலசிறிசேன உண்மையாக இருக்கவில்லை. அரசமைப்புக்கு முரணாக மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கி நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்தவரே மைத்திரிபால.

ரணிலின் சதியால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

ரணிலின் சதியால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த ஜனவரி மாதம் ஹெலிகொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தோம்.

மைத்திரிபால சிறிசேன

கூட்டணியில் ஒன்றிணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டு விட்டு உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அவருக்கு நட்டஈடு விதிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணியில் இருந்து மைத்திரிபால விலகினார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை அமைச்சுப் பதவி வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

தயாசிறி ஜயசேக்கர

இதற்குக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தயாசிறி ஜயசேகர தடையாக இருந்ததாலேயே தற்போது அவரைக் கட்சியின் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் மைத்திரிபால நீக்கியுள்ளார்.

ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு செயற்பாடாமல் இருந்தால் தான் ஆச்சரியமடைய வேண்டும்.

சனல் 4 காணொளியை நிராகரிக்க முடியாது : மைத்திரி அறிவிப்பு

சனல் 4 காணொளியை நிராகரிக்க முடியாது : மைத்திரி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம் என தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US