தயாசிறிக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி: வெளியான தகவல்
அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக அடுத்த வாரம் பதவி ஏற்க உள்ளதாக சிலர் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்க தாம் தயாராக இல்லை என தயாசிறி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
குருநாகல் - பதுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி
ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் அமைச்சுப் பதவியை ஏற்குமாறு தன்னை அழைத்ததாகவும் தனக்குச் சொந்தமில்லாத அமைச்சுப் பதவியை ஏற்கத் தான் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது.
அப்போது அரசியல் குழுவில் 6 பேர் இருந்ததாகவும், 14 பேர் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான செயற்பாடு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
