தென்னிலங்கை போராட்டக் களத்தில் நிர்வாணமாக்கப்பட்ட நபர்கள்! வெளிவரும் பல உண்மைகள் (Video)
கடந்த இரண்டரை வருடக் காலத்தில் ராஜபக்ச அரசாங்கம், அல்லது இணைந்த அரசாங்கத்தின் மூலம் இந்த நாடு எந்தளவு சீரழிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே என கொழும்பில் இருக்கும் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான வி.தேவராஜ் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதன் விளைவாகத்தான் காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, காலி முகத்திடலில் கோட்டா கோ கம என்ற ஒரு இடத்தையும் உருவாக்கினர் என குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலை
அரசியலை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள ஆளும் வர்க்கமும், ஏற்கனவே கூறியதுபோல ராஜபக்ச குடும்பமும், ரணிலை வைத்துக் கொண்டு அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
தூண்டப்பட்ட வன்முறை
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறையின் போது, கோட்டா கோ கமவில் இருந்து போராடிய இளைஞர்கள், நாங்கள் எந்தக் காரணம் கொண்டும் எம்மைத் தாக்க வருபவர்களை தாக்க மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தின் போது காலி முகத்திடலில் அவ்வளவு பெரிய கூட்டமும் இருந்திருக்கவில்லை. எனினும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் நான்கு புறமும் இருந்து காலி முகத்திடலை நோக்கி பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.
எனவே, இந்த போராட்டமோ, இந்த கருத்தியலோ தோற்றுப் போனதாக கூறமுடியாது.
எதிர்த் தாக்குதல்
போராட்டக் களத்தில் பலர் தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட விடயம், காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு அப்பாற்பட்டது.
பொதுமக்களின் எதிர்த்தாக்குதலால் ஏற்பட்ட விளைவே அது, கோட்டா கோ கம போராட்டத்திற்கு அப்பாற்பட்டது அது. தாக்குதலை மேற்கொண்டது பொதுமக்களாக இருந்தாலும், அதில் அரசியல் தலையீடு இருக்காமல் இருக்காது.