ரஷ்ய இராணுவத்தை திணறடிக்கும் உக்ரைன்! முடிவை மாற்றிய இலங்கை (Video)
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவும் உக்கிர நிலையை அடைந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அங்கிருக்கும் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பில் கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் விளக்கமளித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் ரஷ்ய இராணுவத்தை உக்ரைன் திணறடிப்பது மற்றும் இலங்கை முடிவின் மாற்றம் என்பது தொடர்பிலும் அவர் விரிவாக இந்த காணொளியில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தற்போது போர் சூழ்ந்திருக்கக்கூடிய இந்த களத்தில் குழம்பிப்போன தரப்புகள் அதிகம் உள்ள பகுதியாக இந்த தென்னாசியா இருக்கிறது. இலங்கைக்கும், ரஷ்யாவிற்கும் பெரிய தொடர்பு கிடையாது. ரஷ்யாவிற்காக முண்டுகொடுக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது.
ஆகவே இலங்கை உடனடியாக உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு ஆதரவை வெளிப்படுத்துவதன் ஊடாக மேற்கத்திய உலகத்தில் இருக்கக்கூடிய நெருக்கடியை சற்று தணிக்கலாம் என இலங்கை கருதுகிறது.
உக்ரைன் மீதான இலங்கையின் ஆதரவின் பின்னால் இன்னொரு விடயம் இருக்கிறது. இலங்கை இப்பொழுதும் சொல்கிறது இது ஒரு சுதந்திரமான நாடு, எமது உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது, தமிழர் விவகாரம் உள்ளிட்ட இலங்கையில் நடைபெறும் அனைத்து விடயங்களும் உள்நாட்டு விவகாரம். அந்த கருத்தியலை நிலைநிறுத்தும் ஒரு வாய்ப்பாக கூட இலங்கை இந்த சந்தர்ப்பத்தை கையாள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
தொடர்புடைய செய்தி...
ரஷ்யாவின் பெரிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!
ஐம்பது லட்சம் உக்ரேனியர்கள், நாட்டில் இருந்து வெளியேறுவர்! ஐக்கிய நாடுகளின் கணிப்பு! (வீடியோ)
உக்ரைனில் ரஷ்ய மோதலின் பின் இந்தியாவிற்கு அச்சப்படும் நிலையில் இலங்கை (VIDEO)
ரஷ்யர்கள் தலைநகரை தாக்குவார்கள்! - உக்ரைன் ஜனாதிபதியின் எச்சரிக்கை
தொடரும் போர் பதற்றம்! உலகளவில் பாரிய பொருளாதார பாதிப்பென எச்சரிக்கை