உக்ரைனில் ரஷ்ய மோதலின் பின் இந்தியாவிற்கு அச்சப்படும் நிலையில் இலங்கை (VIDEO)
உக்ரைன் - ரஷ்ய மோதல் காரணமாக இந்தியாவினை கண்டு அச்சப்படும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிதியத்தின் பணிப்பாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய மோதல் தொடர்பான பின்னணி தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைன் - ரஷ்ய மோதலின் பின்னர் அண்டைய நாடுகள் நினைத்தால் எந்த அளவிற்கும் செயற்படலாம் என்ற அச்ச உணர்வு தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்காக தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், தேவை ஏற்படின் எதுவும் செய்யலாம் என்ற அச்சம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளமையினால் தற்போது இந்தியாவை இலங்கை அனுசரித்து அரசியல் நகர்வை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.