ஐம்பது லட்சம் உக்ரேனியர்கள், நாட்டில் இருந்து வெளியேறுவர்! ஐக்கிய நாடுகளின் கணிப்பு! (வீடியோ)
ஐம்பது இலட்சம்; உக்ரேனியர்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உதவி நிறுவனங்கள் கணித்துள்ளன.
ரஸ்ய படையெடுப்பால் ஏற்கனவே குறைந்தது 100,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது.
அவர்களில் பாதியளவானோர் கடந்த 48 மணி நேரத்தில் வெளியேறியுள்ளனர்.
போலந்து, மோல்டோவா, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் உக்ரேனியர்கள் தமது நாடுகளுக்கு வந்ததாக அறிவித்துள்ளன.
கடந்த வியாழன் முதல் 35,000 பேர் போலந்திற்குள் நுழைந்ததாக போலந்து அதிகாரிகள் கூறுகின்றனர்,
இந்தநிலையில் 10 லட்சம் உக்ரைன் அகதிகளை அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக போலந்து கூறியுள்ளது.
எனினும் எதிர்வரும் நாட்களில் இதில் மூன்று மடங்கு எண்ணிக்கை போலந்துக்கு செல்லக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்வுகூறியுள்ளது.

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
