நீரிழிவு நோய் உள்ளவரா நீங்கள் - எந்த பழங்களை சாப்பிடலாம் தெரியுமா..!
பழங்களில் பெருமளவு துவர்ப்பு, இனிப்பு சேர்ந்த பழங்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என சித்த மருத்துவர் பாஸ்கரன் தெரிவித்தார்.
நீரிழிவு நோய் மற்றும் அதன் தாக்கம், பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் உள்ளிட்ட விடங்களை லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு சித்த மருத்துவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இதன்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம், காலையில் 40 நிமிட நடைபயிற்சி, அதிகளவில் கிழங்கு வகைகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்தல், எண்ணெய் அதிகளவில் உள்ள உணவுகளை அதிகளவில் எடுப்பதை தவிர்த்தல், விரைவில் சமிபாடடையும் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், யோகா பயிற்சிகளில் ஈடுபடல், மஞ்சள் இஞ்சி பூண்டுபால் என்பவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளல் போன்ற விடயங்களை கடைபிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய்க்கு ஆளாவதை தடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பல தகவல்களை உள்ளடக்கி வருகிறது ஹலோ டொக்டர் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |