அழுகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
பதுளை அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சடலங்கள் இரண்டு நேற்று (13) மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தல்தென அருகே மஹா ஓயாவில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்றை அங்குள்ள மணல் அகழும் தொழிலாளியொருவர் முதலில் கண்டுள்ளார்.
அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மரக்கட்டையொன்றில் தொங்கிய நிலையில் இன்னொரு சடலமும் மிதந்து கொண்டிருந்த நிலையில் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சடலங்கள் இரண்டும் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சடலங்கள் தற்போதைக்கு பதுளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
