புத்தளத்தில் இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி
புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(04.02.2024) இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வைப் பார்த்துவிட்டு முச்சக்கர வண்டியில் திரும்பிச் செல்லும் போது கற்பிட்டி பகுதியிலிருந்து வருகைத் தந்த முச்சக்கர வண்டியுடன் மோதூண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
இதன்போது கற்பிட்டியிலிருந்து முச்சக்கர வண்டியில் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பேரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த ஏழு பேர் படுகாயங்களுக்கு
உள்ளாகிய நிலையில் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆறு
பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் 67 வயதுடைய கற்பிட்டி மண்டலக்குடாப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri