லொறி – வான் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற லொறி மற்றும் வான் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வான் சாரதி காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (26) முற்பகல் 11.30 மணியளவில் ஹட்டன் டிக்கோயா தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
பொகவந்தலாவையிலிருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து நல்லதண்ணி நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் வான் சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri