பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு
பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயரப் பறந்த தமிழீழ தேசியக் கொடி
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமக்கு நீதி வேண்டும் என கோரி பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இலங்கை தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிகராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தில் பெருமளவான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
