பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்: திருகோணமலைக்கு திருப்பியனுப்பப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கடும் வாக்குவாதத்தின் பின்னர் வெருகல் பாலத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெருகல் பாலத்திற்கு அருகில் இன்று (04) காலை தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் குறித்த பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை மற்றும் சோதனை
மட்டக்களப்பு – கல்லடியில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையில் இருந்து பேருந்து ஒன்றில் சென்றவர்களை வெருகல் பாலத்தில் உள்ள பொலிஸ் சேதனைச்சாவடியில் வைத்து பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடம் பயணசீட்டுக்களை கேட்டதாகவும் பின்னர் அவர்கள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியதுடன், பேருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தெரியவருகிறது.
இதன் பின்னர் அனைவருடைய விபரங்களையும் பெற்றதுடன் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் ஆவணங்களையும் பெற்று, அசச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
