யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவு தின இறுதி நாள் நிகழ்வுகள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம்(26) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
மலர் தூவி அஞ்சலி
அதன் போது ஈகை சுடரினை மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகிய இரு மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதேவேளை தியாக தீபம் உண்ணாநோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில் ஈகை சுடரினை மாவீரர்களான செல்லக்கண் மற்றும் இசை செல்வன் ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி , போராளி சுப்பிரமணியம் மலர்விழி ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் நினைவாலயத்தில் உள்ள தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு மாவீரர் அறிவின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை இறுதிநாள் நிகழ்வான இன்றைய தினம் சனிக்கிழமை இளைஞன் ஒருவர் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும் , கிளிநொச்சியில் இருந்தும் தியாக தீபத்தின் திருவுருவ படங்கள் தாங்கிய ஊர்திகள் நினைவாலயத்தை வந்தடைந்திருந்தது.




காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan