போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கோடி ரூபா
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் போில் இரண்டு பேரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது 14 மில்லியன் ரூபா ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னதாக தங்காலை, கொஸ்கோரடுவ, சீனிமோதர பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடம் இருந்து 5 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 377 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் மீன்பிடிக் கப்பலின் மூலம் போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றமை தெரியவந்தது.
இந்தநிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அவரின் தந்தையார் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்கள், 9 மில்லியன் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன.





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
