மீண்டும் பார்வை கிடைப்பது சந்தேகம்! அலுமினிய அடிமட்டத்தை வீசி மாணவனின் கண்ணை தாக்கிய ஆசிரியை...
கொழும்பிலுள்ள அரச பாடசாலையொன்றில் ஆசிரியையின் கொடூரமான செயலால் 7ஆம் வகுப்பு மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைப்பது சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.
லங்காசிறிக்கு வந்த அழைப்பிற்கமைய பொறுப்புவாய்ந்த ஊடகமாக நேரில் சென்று மாணவனிடம் கேட்ட போது உண்மைகள் அம்பலமாகியுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவனிடம் சம்பவதினத்தன்று ஆசிரியர் கேள்வி கேட்ட நிலையில் மாணவன் வேறுஏதாவொரு பதில் கூறியதால் அலுமினிய அடிமட்டத்தை வீசியெறிந்துள்ளார்.
அது கண்ணில் பட்டு இரத்தம் வர வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பார்வை கிடைப்பது சந்தேகம் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மாணவனே கண்ணில் அடித்துக்கொண்டுள்ளார் என கூறி பாடசாலை நிர்வாகம் குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்று 10 நாட்களாகியும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் மாணவனின் தந்தை கூறிய விடயங்கள், குறித்த ஆசிரியையின் பதில் உட்பட மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..



