இலங்கையின் விமான படையின் உயர் அதிகாரி நள்ளிரவில் செய்த மோசமான செயல்: பிரெஞ்சு பெண் குற்றச்சாட்டு
இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரி ஒருவர் மீது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரான்ஸின் மன்னர் பதினான்காம் லூயிஸ் காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவுக்கு அதிக மதிப்புடைய வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பொருட்களை திருடப்பட்டமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலங்கம, ஹோகந்தர தெற்கு, எவரிஹேன பகுதியில் 34 ஆண்டுகளாக வசித்து வரும் 86 வயதான பிரான்ஸ் பெண் தனது வீட்டில் நண்பர் சந்திப்புகள் மற்றும் விருந்துகளை தவறாமல் ஏற்பாடு செய்வதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு பெண் குற்றச்சாட்டு
இவ்வாறான நிலையில் கடந்தாண்டு மே 27ஆம் திகதி முதல் ஜூன் 04ஆம் திகதி வரை நடைபெற்ற விருந்தில் குறித்த விமானபடை உயர் அதிகாரி கலந்து கொண்டதாகவும் தனது வீட்டில் தங்கியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இரவு வேளையில் அலுமாரியில் இருந்து பொருட்கள் திருடப்படுவதை வீட்டில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கண்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அலமாரியில் குறித்த மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனமை தெரிய வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
20 வெள்ளி கரண்டிகள், முள் கரண்டிகள் மற்றும் கத்திகள், 14 வெள்ளி தேநீர் கோப்பைகள், 14 இரவு உணவு தட்டுகள், 03 சூப் கரண்டிகள், 16 வெள்ளி இனிப்பு தட்டுகள், 10 தங்க முலாம் பூசப்பட்ட கரண்டிகள், 10 தங்க முலாம் பூசப்பட்ட தேநீர் கோப்பைகள், 10 தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் மற்றும் 24 குடிநீர் கோப்பைகள், 02 வெள்ளி நகை பெட்டிகள், ஒரு ஜோடி வெள்ளி காதணிகள் மற்றும் ஒரு சிவப்பு சூட்கேஸ் ஆகியவை அடங்கும்.
விருந்தின் பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பிய நிலையில், கடந்த 26 ஆம் திகதி அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



