ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தன்னால் முன்மொழியப்பட்ட 20 அம்ச திட்டங்கள் மீதான முடிவை ஹமாஸ் அமைப்பினர் எடுப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட குறித்த அறிவிப்பில் ஹமாஸுக்கு 3 முதல் 4 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடும் எச்சரிக்கை
மேலும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாற்றிய ட்ரம்ப், ஹமாஸ் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அங்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் அதற்கு தன்னுடைய அரசு முழு ஆதரவும் தரும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, ஹமாஸ் இந்த திட்டத்தை நிராகரித்தால் அது மோசமான முடிவாக இருக்கும் என ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதே சமயம் ஏற்றுக் கொண்டால் A+ வெற்றி எனவம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில், போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு மற்றும் சமாதான சபை நிறுவுதல் ஆகியவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
