கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்த பத்து இலட்சம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்து இலட்சம்
விமானப் பயணி அல்லாத குறித்த நபர் விமான நிலைய தீர்வையற்ற விற்பனை நிலையமொன்றில் இருந்து வெளிநாட்டுத் தயாரிப்பான 75 மதுபான போத்தல்களை கொள்வனவு செய்துள்ளார்.

அதனை விமான நிலையத்தின் கிரீன் கேட் வழியாக மோசடியான முறையில் வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போது விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 75 வெளிநாட்டு சாராய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் பத்து இலட்சம் ரூபாவாகும். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் என்றும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam