வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழர்கள்! பொன்சேகா - சவேந்திரசில்வா தொடர்பில் வலுத்த கோரிக்கை
இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிராசா கூறியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
“இலங்கை பொலிஸாருடன் பேசத்தெரியத அர்ச்சுனா எம்பி தனது தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
அர்ச்சுனா எம்.பி
மேலும் தமிழ் மக்களின் உறவுகளான மலையக தமிழரை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளையும் அர்ச்சுனா எம்.பி நிறுத்த வேண்டும்.
நீதி கேட்டு போராடும் தமிழினம் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கைக்கு கொண்டாட்டமாகவே இருக்கும் என்பதையும் அர்ச்சுனா விளங்கிக் கொள்ளவேண்டும்.
அந்தவகையில் முட்டாள் தனமாக அமைச்சர் சந்திரசேகரனை தாக்குவதை அர்ச்சுனா எம்.பி கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
அத்துடன் கடந்தகால விடயங்களை கூறி அர்ச்சுனா எம்பி மன்னார் விடையத்தில் சாக்குப் போக்கு காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. இது எமது மக்களின் இருப்புக்கான போராட்டம்.
இதை முன்னெடுக்கும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மன்னார் சென்று போராடத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும் இறுதி யுத்த காலப் பகுதியில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த போராளிகள் மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு வெளிக்கொணர வேண்டும்” என்றார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
