த.வெ.க. நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு! வேலூர் பிரசாரம் தொடர்பில் வெளியான தகவல்
அடுத்த கட்டமாக நடைபெற இருக்கும் பிரசார திட்டங்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வரும் வரை அனுமதி கேட்டு பொலிஸாரிடம் மனு கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைக்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அறிவுறுத்தல்
அதன் முடிவிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலை எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள விஜய் 3-ம் கட்டமாக கடந்த 27ஆம் திகதி கரூரில் பிரசாரம் செய்தார்.
அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருந்தார்.
அடுத்தடுத்த பிரசாரங்கள்
இதற்கான முன்னேற்பாடு பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் பொலிஸாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தநிலையில் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
விஜய் வருகிற 4ஆம் திகதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுப் பயணம் இரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



