விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்! கரூர் சம்பவம் தொடர்பில் கனிமொழி எம்.பி.
கருர் சம்பவம் இடம்பெற்ற போது கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் இதுவரை பார்த்திராத ஒன்று என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் பொலிஸார் மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விசாரணை
மேலும் தெரிவித்த அவர்,
திமுக அரசாங்கம் தான் பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும்.
விசாரணை முடிவில் உண்மை வெளிவரும். யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.
திமுக அரசாங்கம்
அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.
நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி



