தமிழக வெற்றிக் கழகத்தின் மற்றுமொரு முக்கியஸ்தர் கைது
தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) கரூர் மத்திய நகரச் செயலாளர் எம்.சி. பவுன்ராஜை கரூர் பொலிஸார் இன்று (30) கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
விசாரணைகள்
குறித்த சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அத்துடன், பொலிஸார் சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளரான மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri