அம்பாறையில் போதைப் பொருளுடன் இருவர் கைது
அம்பாறையில் இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த தகவலுக்கமைய நேற்று (23) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது சாய்ந்தமருது-14 பிரிவில் வதியும் சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் 2220 மில்லி கிராம் உட்பட போதைப் பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகுதி பணத்துடன் கைதானார்.
இதே வேளை மற்றுமொரு சந்தேக நபர் மாவடி பகுதியில் வைத்து கைதானார்.அந்தச் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 2300 மில்லி கிராம் உட்பட ஐஸ் போதைப் பொருள் 60 மில்லிகிராம் பக்கேற் 2 உம் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டது.

அத்துடன் ஒரு தொகுதி பணமும் மீட்கப்பட்டது.மேற்குறித்த பணம் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri