ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் அரசாங்க கடன்தொகை அதிகரிக்கப் போவதில்லை! மத்திய வங்கி ஆளுநர்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Dollars
By Aanadhi May 24, 2026 02:00 PM GMT
Report

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்தொகை ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பதற்குக் காரணம் அல்ல என்றும், வெளிநாட்டுக் கடன் ஒரு டொலர் கூட அதிகரிக்காது என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கடனை ரூபாயில் அல்லாமல் டொலரில் அளவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகில் எந்த நாடும் தனது வெளிநாட்டுக் கடனைத் தனது சொந்த நாணயத்தில் அளவிடுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்

புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்

டொலரின் மதிப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் நாடாளுமன்ற நிதிக் குழுவில் பங்கேற்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது வங்கி ஆளுநர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் அரசாங்க கடன்தொகை அதிகரிக்கப் போவதில்லை! மத்திய வங்கி ஆளுநர் | Sri Lanka Dollar Rate Central Bank Of Ceylon

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, 'டொலரின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக நாட்டின் கடன் சுமை 1.8 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாத கடன் தொகையுடன் ஒப்பிடும்போது நாட்டின் கடன் தற்போது 4.2 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது. அந்தக் கடன்களிலிருந்து எந்தப் புதிய சொத்துக்களும் வரவில்லை' என்று சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க,  இந்தக் கூற்றை நான் முன்பே கேட்டிருக்கிறேன். ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் குறையும்போது அரசாங்கத்தின் கடன்சுமை 30 பில்லியன் ரூபாய் அதிகரிக்கிறது என்ற இந்தக்கூற்று, முழுமையான சித்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

டொலர்களில் உள்ள அரசாங்கத்தின் கடனில், ரூபாயின் மதிப்பு சரிவதால் ஏற்படும் தாக்கத்தைத்தானே நீங்கள் கவனிக்கிறீர்கள்?

கூடுதலாக ஒரு நாள் கூட சிறையில் இருக்க விரும்பாத கபில! சொந்த விருப்பில் எடுத்த முக்கிய முடிவு..

கூடுதலாக ஒரு நாள் கூட சிறையில் இருக்க விரும்பாத கபில! சொந்த விருப்பில் எடுத்த முக்கிய முடிவு..

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, 'ஒரு தனியார் வங்கியின் இலாபங்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கும் போதும், அதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும்போதும் மட்டுமே நீங்கள் அந்த வாதங்களைப் பயன்படுத்துகிறீர்கள்.'

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் அரசாங்க கடன்தொகை அதிகரிக்கப் போவதில்லை! மத்திய வங்கி ஆளுநர் | Sri Lanka Dollar Rate Central Bank Of Ceylon

வங்கித் துறையில் ரூபாய்க்கும் டொலருக்கும் இடையில் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்த, வங்கிகள் டொலரில் அதிக முதலீடு செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன்.

அது ஒரு தனி விஷயம். அதற்குத் தனிப் பதில் உண்டு. ஆனால்இ நாட்டின் கடன் சுமையின் மீது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு கதை. உதாரணமாக, நாட்டின் வெளிநாட்டுக் கடன் இருப்பை எடுத்துக் கொண்டால், அது 30 பில்லியன் அது டொலர்கள் ஆகும்.

அதன் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தாலும், அந்த முப்பது பில்லியன் டொலர் கடன் மாறாது. கடன் ஒரு டொலர் கூட அதிகரிக்காது. நாம் அதை ரூபாயில் கணக்கிடும்போது, ​​கடன் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஆனால் அதை டொலர்களில் எடுத்து ரூபாயில் அளவிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் அந்த டொலர்களில் கடன் வாங்கினால், அதை டொலர்களில் மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டும். அரசின் வருமானமும் செலவும் சமநிலையில் இருக்க வேண்டும்.

அரசின் வருமானத்தின் பெரும்பகுதி பெறுமதிசேர் வரி (VAT) மற்றும் இறக்குமதி வரிகளிலிருந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு குறையும்போது, ​​டொலர்கள் தொடர்பான வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் மூலம் அரசின் ரூபாய் வருமானம் அதிகரிக்கிறது. அதனால்தான் நான் வெளிநாட்டுக் கடன் என்று கூறுகிறேன்.

உலகில் எங்கும் 'ஒரு நாடு தனது வெளிநாட்டுக் கடனைத் தனது சொந்த நாணயத்தில் அளவிடுவதில்லை. அரசாங்கக் கடன் ரூபாயில் அல்ல, டொலர்களில் அளவிடப்பட வேண்டும்.' என்றும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

அதிக நச்சுத்தன்மை கொண்ட கிருமிநாசினிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! ஏற்பட்டுள்ள மாற்றம்

அதிக நச்சுத்தன்மை கொண்ட கிருமிநாசினிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! ஏற்பட்டுள்ள மாற்றம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US