இரகசிய தகவலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வெளிநாட்டவர்கள் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பொதியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், இன்று அதிகாலை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
சீன நாட்டவர்கள் கைது
இரு சந்தேகநபர்களிடமிருந்து 14,000 சிகரெட்டுகள் அடங்கிய 70 அட்டைப் பெட்டிகளும், 18,000 சிகரெட்டுகள் அடங்கிய 90 அட்டைப் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 மற்றும் 56 வயதுடைய சீன நாட்டவர்கள் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.