கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
கிளிநொச்சி - பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.
நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சுரேஸ்குமார் தனிகை (வயது 17), லோகேஸ்வரன் தமிழினி (வயது 17) ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர்.
அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமாண்டி காலனி 3.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் Cineulagam
