முதல் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா
புதிய இணைப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 35.2 ஓவர்கள் நிறைவில் 215 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அவுஸ்திரேலியா சார்பில் சிறப்பாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 59 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களை எடுத்தார்
An emphatic win in Lucknow helps Australia open their account in the #CWC23 ?#AUSvSL ?: https://t.co/nOE42M6VZW pic.twitter.com/vbBfkTDmGI
— ICC (@ICC) October 16, 2023
இரண்டாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 43.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக்கொண்டது.
மேலும், பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அடம் சம்பா, 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அத்துடன், இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 78 ஓட்டங்களையும் பத்தும் நிசங்க 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முதலாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
லக்னோ மைதானத்தில் இன்று(16.10.2023) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி களம் இறங்கும் இரு அணிகளும் 2 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Two changes for ??, Chamika and Lahiru Kumara IN for injured Dasun and Matheesha ?#LankanLions #CWC23 #SLvAUS pic.twitter.com/OLvfnXnBqA
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 16, 2023
அணி விபரம்
அவுஸ்திரேலியா: வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (c), ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
Sri Lanka has won the toss and elected to BAT first in Lucknow ?
— Fox Cricket (@FoxCricket) October 16, 2023
Australia has named an unchanged XI ? https://t.co/z5y9iwiiY1#CWC23 pic.twitter.com/x7x1QaQ0Dr
இலங்கை: பதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மென்டிஸ் (c), சமரவிக்ரம, சாரித் அசலங்க, தனஞ்ஜெயா டி சில்வா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்ன, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்க.