இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் தன்னிடம் ரூபா 25 000 இலஞ்சம் கோருவதாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான சனிக்கிழமை(21) அம்பாறை மணிக்கூட்டு கோபுரம் அருகில் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கூறியமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை மணல் விற்பனை செய்யும் நபர் வழங்கியுள்ளார்.
கைது
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகளை கைது செய்தனர்.
மேலும் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் நபரிடம் இருந்து மணல் போக்குவரத்து தொழிலை எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடரவும் அந்த தொழில் தொடர்பாக சட்டப்பூர்வமாக செயல்படுவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அந்த நபரிடமிருந்து ரூபா 25000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
பின்னர் சம்மாந்தறை பொலிஸ் நிலையத்திற்கு இரு சந்தேக நபர்களும் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
