மட்டக்களப்பு மாநகருக்குள் இரண்டு வாகன தரிப்பீடங்கள் திறப்பு

Batticaloa Eastern Province
By Kumar Jun 03, 2025 11:56 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகரில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு நகரினை அழகுபடுத்தும் வகையிலும் மாநகருக்குள் இரண்டு வாகன தரிப்பீடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

மாநகரங்களை அழகுபடுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்றாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜமீல்,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தொழிலதிபர் மு.செல்வராசா,மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி சங்க தலைவர் ஜலீல் ஹாஜியார்,மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜி.எம்.பி.ஆர்.பண்டார,மட்டக்களப்பு குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகருக்குள் இரண்டு வாகன தரிப்பீடங்கள் திறப்பு | Two Parking Lots Opened Within Batticaloa

இதன்போது மட்டக்களப்பு நகரில் இரண்டு வாகன தரிப்பு நிலையங்கள் மாநகரசபையினால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகருக்குள் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன் அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவந்ததுடன் அவர்கள் தமது வாகனங்களை பிரதான வீதிகளிலும் குறுக்கு வீதிகளிலும் நிறுத்துவதினால் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டுவந்ததுடன் நகருக்கும் தேவைகளை நிறைவேற்றவரும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் புதிய இரண்டு வாகன தரப்பிடங்கள் அமைப்பதனால் பாரிய வாகன நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதுடன் வர்த்தகர்களுக்கும் தமது வியாபார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான நிலை காணப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த வாகன தரிப்பிடம் அமைப்பதற்கான காணியை மட்டக்களப்பு ஆயர் இல்லம் வழங்கியுள்ளதுடன் அதற்கான வாடகையினை வழங்குவதற்கும் தரிப்பிடம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்வதற்குமான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US