கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆலிம் வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரத்திற்கான நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.