பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
போராட்டம்
திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்