வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Shadhu Shanker Aug 30, 2026 11:42 AM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளன.

சிவப்பு அறிவித்தல்கள்

இதன்படி, 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை எனவும், மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள் | 66 Suspects Involved In Organized Crime

முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2024 செப்டெம்பர் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 சந்தேகநபர்கள் சிவப்பு அறிவித்தல்கள் இன்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அறிக்கைகள்

இதேவேளை, 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டு நடைமுறையில் உள்ள மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆகும்.

வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள் | 66 Suspects Involved In Organized Crime

அவற்றில் 96 சிவப்பு அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக பெறப்பட்டுள்ளன.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் அரச உத்தியோகஸ்தர் வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது

யாழில் அரச உத்தியோகஸ்தர் வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது

சிறைச்சாலையில் முன்னணி ஊடகவியலாளர் மீது கடுமையான தாக்குதல்! தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

சிறைச்சாலையில் முன்னணி ஊடகவியலாளர் மீது கடுமையான தாக்குதல்! தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US