நாட்டில் மேலும் இரு வகையான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்
அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து இரண்டு வகையான மருந்துகளைத் திரும்பப் பெறுவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி 2 வகையான எஸ்பிரின் மருந்துகளைத் திரும்பப் பெறுவதற்கான முடிவு செய்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை இன்று (23.07.2023) வெளியிட்டுள்ளது.
பல அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் எஸ்பிரின் மாதிரிகள் அண்மையில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிரின் மருந்துகள்
இதன்போது குறித்த இரண்டு மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து எஸ்பிரின் மருந்துகளையும் அகற்றுமாறு மருத்துவ வழங்கல் பிரிவு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளில் எஸ்பிரின் தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு நடவடிக்கை
இதேவேளை, சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ஏவி ஃபிஸ்துலா எனப்படும் விசேட கெனுயூலர் வகையின் தரமற்ற பகுதியை அகற்றுவதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த கெனுயூலர் வகைகளில் பலவற்றில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மருத்துவ வழங்கல் பிரிவு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
